கவிஞர் புவியரசு மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்!

வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்கள் தமது 96-ஆம் வயதில் நேற்று (30.6.2026) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். இருமுறை ‘சாகித்திய அகாடமி’ விருது வென்றவர் என்ற சிறப்புக்குரியவர் கவிஞர் புவியரசு அவர்கள். கவிதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், திரைப்பட உரையாடல் என பல  வகைகளில் தன் எழுத்தாற்றலில் சிறந்து விளங்கியவர்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

1.7.2026      

சென்னை     

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *