‘குரல் வழித் தகவல்’ மூலமாக இனி புகார் தெரிவிக்கலாம்! ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவிப்பு

1 Min Read

அமராவதி, ஜூன் 30– ஆந்திர தலைநகர் அமராவ தியின் தலைமைச் செயலகத்தில் இருந்து, மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை மேலதிகாரிகளுடன் காணொலி மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நேற்று (29.6.2026)ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு

“அரசு சேவைகளை மக்கள் மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயனடைய வும், தங்களுடைய பிரச்சினைகளையும், புகார் களையும் உடனுக்குடன் தெரிவிக்கவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக இணைய தளம் மூலம் மக்கள் அரசு சேவைகளை விரைவில் பெற்றுக்கொள்ளும் வகையில் வழி வகுக்க வேண்டும்.

இதேபோல் மக்களுடன் நேரடி தொடர்பு உள்ள அரசு துறைகளுக்கு ‘குரல் வழித் தகவல்’ அனுப்பினாலே அவர்களின் பிரச்சினை களை அறிந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

இதற்காகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே ‘மன மித்ரா’ எனும் ‘வாட்ஸ் ஆப் சேவை’ அமலில் உள்ளது. இதனை மக்கள் சரிவர பயன்படுத்தி வருகின்றனர்.

எழுத, படிக்கத் தெரி யாதவர்கள் கூட தங்களின் பிரச்சினைகளைத் தெரி விக்க இந்தத் திட்டம் அவசியம்.

இவ்வாறு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *