டில்லி, பீகார், உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் கொல்கத்தாவில் கட்டுமானப் பணிக் கிடங்கின் மேற்கூரை இடிந்து விபத்து 4 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்!

1 Min Read

கொல்கத்தா, ஜூன் 26- கொல்கத்தாவின் தாரதலா பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் டெப்போ சாலையில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய கிடங்கு (Warehouse) ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

நேற்று மதியம் வழக்கம் போல் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் மேற்கூரை (Roof) திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு காவல்துறை, பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தீவிரமாக இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழப்பு: இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் மீட்கப்பட்ட 21 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் அறிக்கை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இவ்விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *