பள்ளி மாணவர்களின் ஜாதி அடையாளத்திற்கு அடையாள அட்டை வழங்கப்படுமாம் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார்

1 Min Read

சென்னை, ஜூன் 26- பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜாதி சான்றிதழ் வாங்குவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், ஜாதி விவரங்கள் அடங்கிய புதிய ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித் துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று (26.6.2026) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்களுக்கான புதிய அடையாள அட்டை

“பள்ளி செல்லும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக அலைவதையும், அதில் உள்ள சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டு அரசு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு அனைத்து விவரங்களும் அடங்கிய புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.”இந்த புதிய அடையாள அட்டை யில் கீழ்க்கண்ட முக்கிய விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்:

மாணவரின் ஜாதி சான்றிதழ் விவரங்கள் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண், இரத்த வகை அடையாள எண்கள்.

முதற்கட்டமாக, இந்த புதிய அடையாள அட்டையை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கு வதற்கான பணிகள் மற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *