சீராக அதிகரித்த வாக்குப்பதிவு எஸ்.அய்.ஆர். மிரட்டலுக்கு தமிழ்நாடு பணியவில்லை

4 Min Read

சென்னை, ஏப் 24 தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்அய்ஆர்  நடவடிக்கைக்குப் பிறகு, தேர்தல் நடைபெற்ற புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த முறை பதிவான அதிகப்படியான வாக்குப்பதிவுக்கு, வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், நடப்புத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது:

புதுச்சேரி: 91.23% மேற்குவங்கம்: 91.58% தமிழ்நாடு: 84.45% (கடந்த 2021-இல் இது 73.63% ஆக இருந்தது)

தமிழ்நாட்டில் எஸ்அய்ஆர் பணி மூலம் சுமார் 74 லட்சம் பெயர்கள் தொடக்கத்தில் நீக்கப்பட்டன. இதில் முறையான ஆய்வுக்குப் பிறகு: 27 லட்சம் பேர் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இறுதியாக 43 லட்சம் பேரின் பெயர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டன  “நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டு இடங்களில் வாக்கு வைத்திருந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் ஆவர். இந்த போலியான மற்றும் தேவையற்ற பெயர்கள் நீக்கப்பட்டதே, வாக்குப்பதிவு சதவீதம் உயர்வதற்கு முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.”

வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட பிறகு, உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய வாக்காளர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 20 லட்சம் பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.  வாக்காளர் பட்டியலில் இருந்த குளறுபடிகள் களையப்பட்டதோடு மட்டுமல்லாமல், வழக்கமாக வாக்குச்சாவடிக்கு வராத குறிப்பிட்ட பிரிவினரும் இந்த முறை ஆர்வத்துடன் வந்து வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். எஸ்அய்ஆர் பணியின் மூலம் பட்டியல் சரிசெய்யப்பட்ட்து என்று தேர்தல் ஆணையம் கூறினாலும் தமிழ்நாட்டைத் தவிர்த்து இதர மாநிலங்களில் வாக்கு சதவீதம் உயர்வின் மூலம் தேர்தல் ஆணையம் வாக்காளர்களை மறைமுகமாக மிரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இந்த மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம் என்று கூறிக்கொண்டே எப்போதும் போலவே தமிழர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக சென்னையில் இருந்து
6.27 லட்சம் பேர் பயணம் அதிகாரிகள் தகவல்

சென்னை, ஏப்.24 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து இதுவரை 6.27 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்களிக்க பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக போக்குவரத்து துறை தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று (23.4.2026) காலை நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,580 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன் கூடுதலாக 4,158 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ஒட்டு மொத்தமாக 10,169 பேருந்துகள் இயக்கப்பட்டு 6.27 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். மேலும், தேர்தல் தினமான நேற்றைய (23.4.2026) நாள் மதியம் வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக தொலைத்தூர பயணம் மேற்கொண்ட பலர் சரியான நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு வழிவகை செய்யப்பட்டன. மேலும், விடுமுறைக்காக சென்றுள்ளவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற இடங்களுக்கு திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளையும் போக்குவரத்து துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி ‘வாட்ஸ் அப்’ மட்டும் போதும்…

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது.

ஃபேஸ்புக்கில் உள்ள வசதிகளை முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. இப்போது வாட்ஸப் செயலியிலும் இரண்டிலும் உள்ள அப்டேட்கள் கிடைக்கின்றனர். அதொடு, வாட்ஸ் அப்பில் யு.பி.அய். பேமெண்ட் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில் WhatsApp-இல் Prepaid கைப்பேசி டாப்-அப் செய்யும் வசதி படிப்படியாக இந்தியாவில் உள்ள Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவை உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது.

இந்த புதிய சேவையை பயனர்கள் ஆப்பின் முகப்புத் திரையில் (Home Screen) உள்ள ஒரு ரூபாய் குறியீட்டு அய்கான் (rupee symbol icon) மூலம் அணுகலாம். இது பேமெண்ட்ஸ் பகுதிக்கு அழைத்துச் செல்லும். இங்கு, எந்தவொரு மொபைல் எண்ணையும் தேர்வு செய்து, டெலிகாம் ஆப்ரேட்டரை உறுதிசெய்து, கிடைக்கும் பிளான்களைப் பார்த்து, பரிவர்த்தனையை முடிக்கலாம். UPI, டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு பேமெண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. ரூபாய் ஷார்ட்கட், தனிப்பட்ட சாட் உரையாடல்களுக்குள்ளும் (chat conversations) அணுகக் கிடைக்கிறது. இதனால், பயனர்கள் தற்போதைய உரையாடல்களில் இருந்து வெளியேறாமல், பேமெண்ட்களைத் தொடங்கலாம் அல்லது ரீசார்ஜ் சேவைகளை அணுகலாம்.

இந்த புதிய அம்சம், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் WhatsApp-ன் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய படியாகும். இந்த பிளாட்ஃபார்ம் ஏற்ெகனவே சில நகரங்களில் மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் செலுத்துவதற்கும், மெட்ரோ பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கும் உதவுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *