பலவான்குடியில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

2 Min Read

திராவிடர் கழகம்

பலவான்குடி, ஜூன் 25– காரைக்குடி கழக மாவட்டம், கல்லல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் எழுச்சி நாள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் 23.06.2026 அன்று மாலை 6 மணியளவில் பலவான்குடி மூன்று சாலை சந்திப்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்லல் ஒன்றியத் தலைவர் ஆ. சுப்பையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் காப்பாளர் சாமி. திராவிடமணி முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், பலவான்குடியைச் சேர்ந்த மு.ராசா (ப.க.), பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை தொடக்க உரையாற்றினார்.

கழகப் பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கழகச் சொற்பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்தியும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துரைத்தும் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், கல்லல் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் (தி.மு.க.) கா. அப்துல் காசிம் (எ) ராஜா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட ஆலோசகர் சு. முழுமதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன், காரைக்குடி மாநகரச் செயலாளர் அ. பிரவீன், காளையார்கோயில் ஒன்றியத் தலைவர் து. அழகர்சாமி, பாஸ்கரன் (ஒ. சிறுவயல்), க. செல்லத்துரை, ஜமால் முகமது, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்டோர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட துணைச் செயலாளர் இ.ப. பழனிவேல் நன்றியுரையாற்றினார். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லல் ஒன்றியத் தலைவர் ஆ. சுப்பையா இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினருடன் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் இணைந்து குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரைக்குடி கழக மாவட்ட கல்லல் ஒன்றிய திராவிடர் கழகம், சிறப்பாக செய்திருந்தது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *