47 ஆம் ஆண்டாக குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 150 மாணவர்களுடன் தொடங்கியது!

1 Min Read

திராவிடர் கழகம்

குற்றாலம், ஜூன் 25 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 47 ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்தில் இது பயிற்சிப்பட்டறை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 47 ஆம் ஆண்டு ஆகும். இந்த ஆண்டு, குற்றாலம் வி.கே.என். மாளிகையில் 25.06.2026 அன்று காலையில் 10:30 மணிக்குத் தொடங்கியது.‌ தென்காசி மாவட்டச் செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையேற்றுப் பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாநில மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் இராசேந்திரம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *