தஞ்சை, மே 3- பெரியார் பேசுகிறார் தொடர் – 106 ஆவது நிகழ்வில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 ஆவது பிறந்த நாள் சிறப்பு கூட்டம் 30-4-2026 அன்று மாலை 6.00 மணி அளவில் தஞ்சை கீழ ராஜ வீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ந. பாவேந்தி தலைமை ஏற்றார். கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், அ.முருகேசன் முன்னிலை வகித்தனர். ப.க மாவட்ட பொறுப்பாளர் ஏ.வி.என். குணசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் தலைவர் ந. பாவேந்தி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து புரட்சிக் கவிஞரை வாசிப்போம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
தொடக்கத்தில் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தொடக்க உரையாற்றினார், கல்லூரி மாணவர்கள் புரட்சிக் கவிஞரின் புதியதோர் உலகம் என்ற தலைப்பில் செ. வசந்தகுமார் அவர்களும், புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் என்ற தலைப்பில் ச. பிரபாகரன் அவர்களும் புரட்சிக் கவிஞரின் பெண்ணுரிமை என்ற தலைப்பில் நா. சுபா அவர்களும் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த ப.க தோழர்கள் விசிறியடிகளார் ,முருகன், வெ. துரை கவிஞர் பகுத்தறிவு தாசன், ச. விசுவநாதன், தன. சீனிவாசன், ஆசிரியர் குமுதா, ஆசிரியர் பா. நிர்மலா, நா. ராமையன், அ. குழந்தைசாமி, கழக பேச்சாளர் பூவை புலிகேசி, அ.கலைச்செல்வி, இரா. மகாலிங்கம், இரா. இளவரசன், அ. சமசுநசா, அ. சாந்தி, ப. யாழிசை, ஆசினா பானு, சாமி. கலைச்செல்வன், அ. ஜெயராமன், தங்க. வெற்றிவேந்தன், க. க. தியாகராஜன், மாநகர செயலாளர் இரா. வீரகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பெரியார் செல்வன், கோபு. பழனிவேல், அ. கலைச்செல்வி, பாவலர். பொன்னரசு ஆகியோர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை பாடி மகிழ்வித்தனர். மாநில ப.க அமைப்பாளர் கோபு பழனிவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார், மாநகர ப.க. அமைப்பாளர் மா. ஏழுமலை நன்றி கூறினார். இரவு 9.00 மணி அளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
