புதுடில்லி, ஜூன் 23- பன்னாட்டு அளவில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு வழங்கப்படும் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி யுள்ளது.
இதில் இந்தியத் தொழில்நுட்பக் கழகமான டில்லி அய்அய்டி மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில், டில்லி அய்அய்டி பன்னாட்டு தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 118ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் முன்னிலையில் இருந்த மற்ற கல்வி நிறுவனங்களை முந்தி டில்லி அய்அய்டி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த மும்பை அய்அய்டி (IIT Bombay) இந்த முறை 5 இடங்கள் சரிந்து, 134ஆவது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை அய்அய்டி தரவரிசையில் 10 இடங்கள் அதிரடியாக முன்னேறி, 170-வது இடத்தைக் கைப்பற்றி சாதனைப் பட்டியலில் இணைந் துள்ளது.
பன்னாட்டு அளவில் ஒட்டு மொத்த தரவரிசைப் பட்டியலில், அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் வழக்கம் போல் தனது ஆதிக்கத்தை நிலைநி றுத்தியுள்ளது.
இந்நிறுவனம் தொடர்ந்து 15ஆவது ஆண்டாக உலகளவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்திய கல்வி நிறு வனங்களின் இந்த பன்னாட்டுஅளவிலான போட்டி மற்றும் முன் னேற்றம், நாட்டின் உயர் கல்வித் தரம் உலகத் தரத்திற்கு உயர்ந்து வருவதைக் காட்டுவதாகக் கல்வித் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
