திரிணாமூல், சிவசேனாவை தொடர்ந்து சமாஜ்வாதியை உடைக்கத் தீவிரம்

2 Min Read

தொடரும் பணபலம்; குதிரை பேரம்; மிரட்டல்…
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பா.ஜ.க. திட்டம்

புதுடில்லி, ஜூன் 22 மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியப் பின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக இரண்டாக உடைத்து, மூன்றில் இரண்டு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனி அணியாக பிரித்தது. அதாவது 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்சிபிஅய் என்ற அறியப்படாத கட்சியில் இணைத்து, நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற தங்கள் ஆதரவு வாக்குகளாக மாற்றிக் கொண்டது பாஜக. அதே போல 60–க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அணியே உண்மையான திரி ணாமூல் காங்கிரஸ் என்று ரிதபிரதா (திரிணாமூல் எம்.பி.,) மூலம் கட்சிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போக ஒரு தலைக்கு ரூ.15 முதல் ரூ.50 கோடிவரை அளித்து சிவசேனா (உத்தவ்) கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தங்கள் கூட்டணி பக்கம் வளைத்துள்ளது பாஜக. இந்நிகழ்வு களால் நாடாளுமன்றத்தின் உறுப்பி னர்களின் எண்ணிக்கையின் சமனை மாற்றி அமைத்துள்ளது.

மீண்டும்…

இந்நிலையில், பணபலம் ; குதிரை பேரம்; மிரட்டல் மூலம் எதிர்க்கட்சி களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதன் மூலம், கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தோல்வியடைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி வரையறை மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பாஜக திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்கள் மக்க ளவையில் 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால்தான் மக்களவையில் மசோதாவிற்கு சாதகமாக வாக்குகளைப் பெற எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜக தங்களுக்கு சாதகமாக வளைத்துள்ளது. இதன் மூலம் மகளைவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கூடுதலாக 26 வாக்குகள் (தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது மொத்த வாக்குகள் 318) கிடைக்கும்.

சமாஜ்வாதியை உடைக்க பா.ஜ.க. தீவிரம்?

ஆனாலும் மசோதா நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்னும் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறை கிறது. இதனால் சமாஜ்வாதி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. சமாஜ்வாதி கட்சிக்கு 37 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை வளைக்க பாஜக தனி யாக தங்கள் கட்சிக்குள் ஒரு அணியைவே உருவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநிலங்களவை…

மக்களவையைப் போலவே, மாநி லங்களவையிலும் இந்த மசோதாக்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதற்கு 164 வாக்குகள் அவசி யமாகும். மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆம் ஆத்மி 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜக தங்கள் பக்கம் வைத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பதவி விலக வைத்துள்ளது பாஜக. இதன்மூலம் ஜனநாயகத்திற்கு அநீதியான இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தொடர்ச்சியாக அடாவடியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *