தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து! அரசாணை வெளியீடு

சென்னை, ஜூன் 22– இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அரசாணை:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.

அதன் அடிப்படையில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட பணிகள் தொடங்கப்படாத நிலையில் அந்த அறிவிப்புகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு, கோயில்களிடமிருந்து முன்மொழிவுகள் வரப்பெற்றது.

எனவே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் அறங்காவலர் குழு மற்றும் தக்கார் தீர்மானத்தின்படியும், இணை ஆணையர்களின் முன்மொழிவுகளை ஏற்று கோயில் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யுமாறு அறநிலையத்துறை ஆணையர் அரசை கேட்டு கொண்டுள்ளார்.

இதை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, பழநி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், சென்னை மேற்கு மாம்பலம் பாஷ்யகார ஆதிசென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்ளிட்ட 46 கோயில்களின் உபரிநிதியின் மூலம் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளை சட்டமன்ற அறிவிப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *