கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.6.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ராமன் கோயில் காணிக்கை காணாமல் போன விவகாரத்தில் அயோத்தியை விட்டு வெளியே செல்ல கோயில் நிர்வாகிகளுக்கு தடை. அயோத்தி கோயிலுக்கு பக்தர்கள் அளித்த பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் காணாமல் போனதாக சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியது. இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்அய்டி) மாநில பாஜக அரசு நியமித்தது.

*நீட் தேர்வு மோசடிக்கு எதிரான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டில்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் கலந்து கொள்ள, அக்கட்சி அழைப்பு.

* மோடி இந்தியாவை அழிக்கிறார்; டிரம்ப் உலகை அழிக்கிறார், காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்.

தி இந்து:

* ராமன் கோயில் விவகாரத்தில் ₹5,000 கோடி ‘முறைகேடு’: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு. கோயில் தொடர்பான இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார்; இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு நடத்தி வரும் விசாரணையை சுட்டிக்காட்டிய அவர், ராமன் பெயரில் பணத்தை சுருட்டியவர்கள் ‘சிறையில் அடைக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

* வாக்களிக்கும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்: என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை.

தி டெலிகிராப்:

* நீட் (NEET) சர்ச்சை மற்றும் ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. தேர்வு முறைகேடுகள் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் போராடி வருகின்றனர்; அதே வேளையில் சில போராட்டக்காரர்கள் போராட்ட இடத்திலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘பெரிய ஆட்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், அரசு கூட கவிழலாம்’: ராமன் கோயில் நன்கொடை ‘திருட்டு’ விவகாரத்தில் சிபிஅய் (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) நடவடிக்கை எடுக்காதது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி.

குடந்தை கருணா

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *