நாக்பூர், ஜூன் 21- கடந்த மே 3-ஆம் நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. மறுதேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்வு மய்யம் ஒதுக்குவதில் குளறுபடி கண்டறியப்பட்டுள்ளது.
அப்துல்லா முகமது தலிப் என்ற மாணவர், தனக்கு நாக்பூர் பகுதியில் தேர்வு மய்யம் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அபுதாபியில் மய்யம் ஒதுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
