தனியார் கல்வி நிறுவனங்களில் ஜாதி விவரங்களைக் கேட்கத் தடைவிதிக்கக் கோரி வழக்கு! முதன்மைச் செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

1 Min Read

மதுரை, ஜூன் 21- தனியார் கல்வி நிறுவனங்களில் ஜாதி மற்றும் சமூக விவரங்களை சேகரிக்கத் தடை கோரிய வழக்கில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த விக்ரமன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் ஜாதி கேட்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்பதாரர்களின் ஜாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாகக் கேட்பது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கைச் செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பப் படிவங்களில் ஜாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாகச் சேகரிக்கத் தடை விதிப்பதோடு, தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதி செய்திட உரிய ஒழுங்கு முறைகளை வகுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை 19.6.2026 அன்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர், ‘‘விண்ணப்பத்தில் கேட்கும் ஜாதிய விவரங்களை கட்டாயமாக பெறக் கூடாது என்பது குறித்து கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா’’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர், மனுவிற்கு பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *