கல்லக்குறிச்சி, ஜூன் 20- கல்லக்குறிச்சி நகர கழகம் சார்பில் கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 8.6.2026 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர கழகத் தலைவர் இரா.முத்துசாமி தலை மையில் மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழகச் செயலாளர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் புலவர் பெ.சயராமன், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன், மாவட்ட ப.க செய லாளர் வீர.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தும், கழக வழக்குரைஞர் ஏ.கலைஞன் அனைவரையும் வரவேற்கவும் ஒன்றிய கழகச் செயலாளர் த.ராஜேந் திரன், மாவட்ட ப.க செயலாளர் சி.வெங்கடேசன் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டும் கழகப் பேச்சாளர் முனைவர் காஞ்சி கதிரவன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் விளக்கமாக ஒரு மணிநேரம் சிறப்புறையாற்றினார் நிகழ்ச்சில் கலந்துகொண்ட கழகத் தோழர்கள் பொதுமக்கள் அனை வருக்கும் மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன் நன்றி தெரிவித்தார்.
