கல்லக்குறிச்சியில் நகர கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

கல்லக்குறிச்சி, ஜூன் 20- கல்லக்குறிச்சி நகர கழகம் சார்பில் கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 8.6.2026 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகர கழகத் தலைவர் இரா.முத்துசாமி தலை மையில் மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழகச் செயலாளர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் புலவர் பெ.சயராமன், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன், மாவட்ட ப.க செய லாளர் வீர.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தும், கழக வழக்குரைஞர் ஏ.கலைஞன் அனைவரையும் வரவேற்கவும் ஒன்றிய கழகச் செயலாளர் த.ராஜேந் திரன், மாவட்ட ப.க செயலாளர் சி.வெங்கடேசன் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டும் கழகப் பேச்சாளர் முனைவர் காஞ்சி கதிரவன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் விளக்கமாக ஒரு மணிநேரம் சிறப்புறையாற்றினார் நிகழ்ச்சில் கலந்துகொண்ட கழகத் தோழர்கள் பொதுமக்கள் அனை வருக்கும் மாவட்ட ப.க தலைவர் பெ.எழிலரசன் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *