
காரைக்கால், ஜூன் 19– காரைக்கால் மாவட்டம் திராவிட கழகத்தின் சார்பில் காரைக்கால் 13.06.2026 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா. திராவிடர் எழுச்சி நாள் பிரச்சார கூட்டம் எழுச்சியுடன் நடை பெற்றது.
மாவட்ட காப்பாளர் ந.அன்பானந்தன் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். காரைக்கால் மாவட்ட துணைத்தலைவர் க.பதிஜெயசங்கர், அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, தொடக்க உரையாற்றினார்.
சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரி யர் பூ.சி.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.
தரங்கை பகுதி பொறுப்பாளர் நாத்திக.பைசல், இராமலிங்கம். ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். திமுக மாநில மாணவரணி அமைப்பாளர் ப.பெரியார் ஜவகர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, சி.பி.அய். மாவட்ட செயலாளர் எஸ்.தமிழரசன், சி.பி.அய்.(எம்) காரைக்கால் பகுதி மூத்த தோழர் வே.கு.நிலவழகன், விசிக மாநில அமைப்புச் செயலாளர் அ.அரவரசன், எஸ்.டி.பி.அய். மாநிலத் தலைவர் சுல்தான் கவுஸ், மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு உரையாற் றினார்கள்.
காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன். பன்னீர்செல்வம், நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்து. நிகழ் வினை தொகுத்து வழங்கி உரையாற்றி அனைவ ருக்கும் நன்றி கூறினார்.
