திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர், விடுதலை முகவர் இரா.தமிழ்ச்சுடர் அவர்களின் 83 ஆவது ஆண்டு பிறந்தநாள் (20.06.2026) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி வட்டம், வீரராகவபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைவதற்கு தனது நிலத்தை அரசுக்கு வழங்கிய வீரராகவபுரம் கரு.பாப்பம்மாள் அவர்களின் மூன்றாம் ஆண்டு (19.06.2026) நினைவு நாளில் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 மட்டும் நன்கொடை வழங்கியுள்ளனர்.
மகன்கள் கரு.கார்த்திகேயன், முனைவர் கரு .கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ,பட்டுக்கோட்டை கழக மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர்
மருமகள்கள் கா . சரோஜா, முனைவர் கி .ஜெயராமு மற்றும் பேரன், பேத்திகள் வீரராகவபுரம் – தஞ்சாவூர் மாவட்டம்.
