சென்னை, ஜூன்.19 சென் னையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டது. இதன்மூலம், 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கல்லீரல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மருத்துவப் பயனாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இதய வால்வு முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப் பட்டது. இந்த உன்னதமான கொடையின் மூலம் மொத்தம் 6 பேர் புதியவாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்பு கொடை செய்த மாணவனின் உடலுக்கு, அரசு மருத்துவமனையின் மருத்து வர்கள் மற்றும் ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் குடும்பத்தி னரிடம் ஒப்படைக்கப் பட்டது.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சிற்றரசு (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிற்றரசு தனது உறவினருடன் கடந்த 13-ஆம் தேதி அயனாவரம் கான்ஸ்டபிள் சாலை அம்பேத்கர் சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்த சிற்றரசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிற்றரசு நேற்று முன்தினம் (17.6.2026) இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இந்த துயரமான நிலையிலும், அவரது உடல் உறுப்புகளை கொடை செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலில் இருந்து இதய வால்வு, கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டன.
