
திராவிடத் தீக்குச்சிகளை
அடைகாத்துக் கொண்டிருக்கும்
தீப்பெட்டியைப் போன்றவர்
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்!
அன்று –
பெரியாரிடத்தில் நின்றவர்!
இன்று –
பெரியாரின் இடத்தில் நிற்பவர்!
தினமும்
கருப்புச் சட்டையும்
கருத்துச் சண்டையும்
போட்டுக் கொண்டே இருக்கிற போராளி!
அவர் சட்டைபோடுவதும்
சண்டை போடுவதும் ஒன்றுக்காகத்தான்!
‘மெய்யைக்‘ காப்பாற்றுவதற்காக!
சுயமரியாதைச் சுடருக்குத் திரியானவர்! – நம்
பகுத்தறிவுப் பகலவனைச் சுமந்து பரியானவர்!
தன்மான ஆடைநெய்யும் தறியானவர்! – இவர்
தமிழரின் மானத்துக்கு முகவரியானவர்!
சாத்திரக் குப்பைகளுக்கு எரியானவர்! – இன்று
சமூகநீதிச் சண்டைக்கு இவர்தான் சரியானவர்!
தஞ்சை உபயதுல்லா பிறந்தநாள் விழாவில் ஆசிரியர் பற்றி…
– தஞ்சை இனியன்
