சென்னை, ஜூன் 18- விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜய பாஸ்கர் தனது பதவி விட்டு விலகியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.
அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் 17.6.2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
6 தொகுதிகள் காலி: ஆகஸ்டில் இடைத்தேர்தல்?
தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதல மைச்சர் ச.ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றிபெற்று, பின்னர் பதவி விலகிய திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. தற்போது சி.விஜயபாஸ்கர் உட்பட மேலும் 5 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை விட்டு விலகியுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் தற்போது மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 6 தொகுதி களுக்கும் சேர்த்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகத் தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிலர் பதவி விலகத் திட்டம்?
இதற்கிடையே, இந்த 6 தொகுதிகள் தவிர, அதிமுகவைச் சேர்ந்த மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை விட்டு விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
எனவே, அடுத் தடுத்து நடக்கும் பதவி விலகல்களைப் பொறுத்து, தமிழ்நாட்டில் காலியாகும் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
