பெரியார் விடுக்கும் வினா! (1997)

1 Min Read

பார்ப்பனரல்லாதார் என்கிற பெயர்  ஒரு பெரும்பான்மை மக்களை ஒரு சிறுபான்மை மக்கள் “அல்லாதார்” என்கிற பெயரால் அழைப்பதாக இருப்பதாலும் அது அவ்வளவு சரிப்படுமா? மேலும் இந்நாட்டு மக்கள் அல்லாத அந்நியர்களும் பார்ப்பனர் அல்லாதார் என்ற தலைப்பின் கீழ் வரக்கூடுமாதலாலும், தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென் இந்தியாவில் வாழும் எல்லா மக்களுமே வரக்கூடுமாதலாலும், இது தவிர்த்துத் தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும் அந்தத் தலைப்பிலும் தமிழ்ப் பண்பில்லாத தமிழ்க் கலாச்சாரத்திற்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளாமல் இருப்பார்களா? ஆதலால், மக்களை இனத்தின் பேராலேயே, கலாச்சாரத்தின் பெயராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலேயே பார்ப்பனரல்லாதார் கழகத்தை, ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கழகம் என்கிற பெயரால் அழைக்க வேண்டியதானதன்றி வேறென்ன?

 தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’  தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *