மும்முனை மின்சாரம் இல்லாததால் தண்ணீர் இன்றிக் கருகும் நெல் பயிர் விவசாயிகள் பாதிப்பு

1 Min Read

கடலூர், ஜூன் 15 கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியில் விவசாயிகள் ஏற்ெகனவே குறுவை நெல் சாகுபடி தொடர்பாக பல்வேறு பணிகளை செய்து நடவு செய்துள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மும்முனை மின்சாரம் இன்றி நெல் வயல்களுக்கு தண்ணீர் முறையாக பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் நெற்பயிர்கள் கருகியும், வயல்கள் தண்ணீர் இன்றி வெடித்தும் காணப்படுகிறது.

கொழைசாவடி குப்பம், கானூர், பவழங்குடி, வளசகாடு, தேத்தாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதுபோன்று விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் மும்முனை மின்சாரம், மறுபுறம் நோய் தாக்குதல் உள்ளிட்ட செயல்களால் டெல்டா பகுதியான கடலூர் மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை மேற் கொண்டு மின்வெட்டு இன்றி விவசாய நெல் பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *