தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை ஒன்றிய அரசு அறிவிப்பு

2 Min Read

புதுடில்லி, ஜூன் 13- தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மொத்தமாக டீசல், பெட்ரோல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு 90 நாள்களுக்குத் தடை விதித்துள்ளது. அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒரு வாகனத்துக்கு 200 லிட்டா் டீசல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

மொத்தமாக விற்பனை செய்ய தடை

மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போரால், அந்த பிராந்திய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாதவாறு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாக டீசல், பெட்ரோலை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் விற்கக் கூடாது. அந்தத் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டீசல், பெட்ரோலை மொத்தமாக அவா்களின் ஆலைகளுக் குள் இருக்கும் பெட்ரோல் விற்பனை மய்யத்தில் இருந்தே பெற வேண்டும். இந்த மொத்த பெட்ரோலும் டீசலும் ஆலைகள், நிறுவனங்களுக்குச் செல் வதைத் தடுப்பதன் மூலம், அவற்றை சாதாரண வாகன ஓட்டிகள் வாங்க முடியும். இதன்மூலம் உள்ளூா் சந்தையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது.

பெட்ரோல் விற்பனை நிலையங் களில் வாகனங்களில் நாளொன்றுக்கு 200 லிட்டா் மட்டுமே டீசல் நிரப்ப வேண்டும். அந்த டீசல், வாகன டேங்கா் அல்லது பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் தடுப்பு அமைப்பின் (பெசோ) அங்கீகாரம் பெற்ற கண்டெய்னா்களில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். அந்த டீசலை வாகன ஓட்டிகள் மறுவிற்பனை செய்யக் கூடாது. இந்தக் கட்டுப்பாடு 90 நாள்களுக்கு அமலில் இருக்கும். அதன்பிறகு ஒன்றிய அரசு விரும்பினால், புதிய அறிவிப்பு மூலம் மேலும் நீட்டிக்கப்படும்.

இந்தக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என ஒன்றிய, மாநில அரசுகள் கண் காணிக்க வேண்டும். அதேபோல், பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வும் ஒன்றிய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல், டீசல் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதே அந்த அறிவிப்பின் நோக்கம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *