அயோத்தி ராமன் கோவில் நன்கொடை வசூலில் மோசடி! மேனாள் நாடாளுமன்ற பா.ஜ.க. உறுப்பினரின் ஒப்புதல்!

1 Min Read

அயோத்தி, ஜூன் 12 உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், சிறீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் ராமன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் கணக்குப் பொறுப்பாளராக இருந்த மஹிபால் சிங், நன்கொடை வசூலில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடப்பதாக அண்மையில் புகார் தெரிவித்திருந்தார்.

இதே குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘அயோத்தி கோவில் நன்கொடை விவகாரத்தில் பா.ஜ., மவுனம் சாதிக்கிறது’ என, விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து சிறீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைத் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாசின் வாரிசான மஹந்த் கமல் நயன் தாஸ் நேற்று (11.6.2026) கூறியதாவது:

‘‘ராமன் கோவில் நன்கொடை விவகாரத்தில் மோசடி நடந்தி ருப்பதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து, பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த விவகாரத்தில் நேர்மையான, வெளிப்படையான விசாரணை தேவை என்ப தால் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, முன்னாள் பா.ஜ., – எம்.பி., பிரிஜ் பூஷன் சிங் கூறுகையில், ‘‘நன்கொடையில் முறைகேடு நடந்தது தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.   ஆனால், அந்த உண்மைகளை வெளியே சொன்னால் எனக்குத்தான் பிரச்சினை. இதில் தொடர்புடையவர்கள் எல்லாம் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள்” என்றார்.

‘‘எனவே, தற்போது உண்மையைச் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. சமயம் வரும் போது, உண்மைகளை பேசுவேன்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *