கேரளத்தில் மீண்டும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா: 4 வயது சிறுமி உயிரிழப்பு; அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

1 Min Read

கோழிக்கோடு, ஜூன் 8 கேரள மாநிலம் கோழிக் கோடு மாவட்டத்தில் ‘ஷிகெல்லா பாக்டீ ரியா’ தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

1897 இல் ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் கியோஷி ஷிகா என்பவர் ‘ஷிகெல்லா’ பாக்டீரியாவை முதன்முதலில் கண்டுபிடித்தார். உலகளவில் ஆண்டுதோறும் ஷிகெல்லா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில், கடந்த மார்ச் மாதம் கோழிக்கோடு மாவட்டத்தின் பெருவயல் கிராமத்தில் 63 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகளால் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து கோழிக்கோடு மாவட்டத்தில் மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியா பரவல் தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கபட்ட 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இத னால் கோழிக்கோட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகா தாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் பேசு கையில், ‘‘ஷிகெல்லா தொற்றின் காரணமாக மூன்று குழந்தைகள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தலக்குளத்தூரைச் சேர்ந்த நிலா என்ற நான்கு வயது சிறுமி கடந்த 6.6.2026 அன்று உயிரிழந்தார். ஷிகெல்லா என்பது குடலை பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று. இது வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த நோய் முக்கியமாக மாசுபட்ட உணவு, நீர் மூலம் பரவுகிறது. இது பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடைமுறைகள் அவசியமாகும். கடந்த வாரம் ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் சுமார் 123 பேர் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *