பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

3 Min Read

திருச்சி, மே 31- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்களுக்கான ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நேறறு (30.05.2026),, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் முதல் நிகழ்வாக பெரியார் கல்விக் குழுமத்தின் தாளாளர் முனைவர் வீ. அன்புராஜ் தொடக்கவுரையாற்றினார்.

பெரியார் கல்விக் குழுமத்தின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இப்பயிற்சி பட்டறையினை துவக்கி வைத்து ‘தந்தை பெரியாரால் விளைந்த கல்விப் புரட்சி’ என்ற தலைப்பில் முதல் வகுப்பினை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து தஞ்சை தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ந.எழிலரசன் ‘தமிழுக்கு என்ன செய் தார் பெரியார்’ என்ற தலைப்பில் இரண்டாம் வகுப்பினையும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் பேரா. முனைவர் நம். சீனிவாசன் ‘சமூக நீதி வரலாறு’ என்னும் தலைப்பில் மூன்றாம் வகுப்பினையும் நிறைவு செய்தார்.

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் ‘அறிவியலும் மூடநம்பிக்கையும்’ என்ற தலைப்பில் நான்காவது வகுப்பை நிறைவு செய்தார். அய்ந்தாவது நிறைவு வகுப்பினை திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் வி.சி. வில்வம் ‘ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்’ என்ற தலைப் பில் கருத்துரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பணித் தோழர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்கள் பதிலளித்து பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் சிறப்பாக குறிப் பெடுத்த ஆசிரியர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார். திருச்சி பெரியார் துவக்கப்பள்ளியின் தாளா ளர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். பெரியார் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தலைமை ஆசிரியர்கள், பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பெரியார் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ப.விஜயலெட்சுமி நன்றி கூற பயிற்சிப் பட்டறை இனிதே நிறைவு பெற்றது.

‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’

இந்நிகழ்வில் பெரியார் கல்வி நிறுவன தலைமைப் பொறுப்பாளர்களுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. பணித் தோழர்கள் கருத்துப் படிவத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும் அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் முதல்வர் பேரா.ப.சுப்ரமணியன் மற்றும் மேனாள் தொடக்க கல்வி அலுவலர் அழகிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பணித் தோழர்களுக்கு மதிய உணவினை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள் சிறப்பாக செய்து கொடுத்திருந்தார்கள். இப்பயிற்சிப்பட்டறையில் 27ஆண்கள் மற்றும் 172 பெண்கள் மொத்தம் 199 பணி தோழர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சிப் பட் டறை சிறப்பாக நடைபெற தக்க ஆலோ சனைகளையும் ஏற்பாடுகளையும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்பாக செய்திருந்தார்.

முன்னதாக ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ என்ற புத்தகத்தின் விற்பனைத் தொகையான ரூ 2,29,000 னை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மேலும் இப்பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் பணி தோழர்கள் பயனடையும் வகையில் மூலிகை தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *