நிலவில் நிரந்தர ஆய்வுத் தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை வெளியிட்டது நாசா

1 Min Read

வாசிங்டன், மே 29- நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தரத் தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி மய்யமான, ‘நாசா’ தலைமையில், சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்- – 2 திட்டம் மூலம் 54 ஆண்டுக்குப் பின், முதல் முறையாக நிலவை நெருங்கிச் சென்றனர்.

அந்த திட்டத்தை தொடர்ந்து, தற்போது நிலவில் நிரந்தர ஆய்வுத் தளம் அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. இதற்காக, 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிட உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில், ‘ரோவர்கள், ட்ரோன்’கள் உள்ளிட்ட துணைக் கருவிகளுடன் கூடிய நிரந்தரத் தளத்தை அமைக்க நாசா திட்ட மிட்டுள்ளது.

இதில், ‘ரோவர்’ என்பது கேமராக்கள், சென்சார்கள் மற்றும் கற்கள், மணல் சேகரிக்கும் இயந்திர கைகள் கொண்ட வாகனம் ஆகும். ட்ரோன்கள் என்பவை ஆளில்லா சிறிய ரக விமானங்கள்.

இத்திட்டம் குறித்து நாசா நிர்வாகி ஜாரெட் அய்சக்மேன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு திரும்புகிறது. நிலவில் அமைக்கப் படும் ஆய்வுத் தளம் மனிதகுலத்தின் முதல் நிரந்தர வெளி உலக தளமாக இருக்கும்.

இந்த ஆய்வுத் தளம், நிலவின் ஆபத்தான சூழலில் மனிதர்கள் எப்படி வாழ்வது, செயல்படுவது என்பதை கற்றுக்கொள்ள உதவும். அங்கு ரோவர்கள், ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட துணைக் கருவிகள் இடம் பெறும்.

வரும் 2028இல் சந்திரனில் விண்வெளி வீரர்களை இறக்கி விடுவதுதான் எங்கள் இலக்கு. அதற்காக இந்த ஆண்டே மூன்று விண்கலனை அனுப்பி தொழில் நுட்பங்களை சோதித்து, எதிர்கால விண்வெளி வீரர்களின் பயணத்திற்கு அடித்தளம் அமைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *