‘சோபா மாடல்’ ஆட்சியில் காவல்துறையாலும் பாதுகாப்பு இல்லை; காவலருக்கும் பாதுகாப்பு இல்லை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

1 Min Read

சென்னை, மே 29 சோபா மாடல் ஆட்சியில் காவல்துறையாலும் பாதுகாப்பு இல்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பு இல்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பாலியல் சீண்டலுக்குக்கும் ஆளாக்கின சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.

காவலரிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள, அந்த சிறுவன் காவல்நிலையத்துக்கு ஓட வேண்டிய நிலையில் தான் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீரழிந்துப் போய் இருக்கிறது. இதுமட்டுமல்ல, வேளச்சேரியில் நடைப்பயிற்சிக்கு போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கின கொடுமையும் நடக்கிறது. கும்பகோணத்தில் ஆளுங்கட்சியினர் தாக்கியதில் ஒரு காவலருக்கே கை உடைந்து போனதாகவும் செய்தி, இந்த சோபா மாடல் ஆட்சியில், காவல்துறையாலும் பாதுகாப்பு இல்ல, காவல்துறைக்குமே பாதுகாப்பு இல்ல.

ஆட்சியை காப்பாத்திக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பிடிக்கிற வேலையை விட்டுவிட்டு, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *