செய்தியாளர்களிடம் அதைப்பற்றி கேட்காதீர்கள் என்று கூறியதால் பரபரப்பு

தமிழ்நாட்டில்
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்து பதில் அளிக்க அமைச்சர் தமிழ்ச்செல்வன் மறுப்பு

ராசிபுரம், மே 29 தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு குறித்த கேள் விக்கு, “அதைப்பற்றி கேட்கா தீர்கள்” என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தி யாளர்களிடம் பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள லோகேஷ் தமிழ்ச்செல்வன், நேற்று தனது தொகுதிக்கு வருகை தந்தார். அவருக்குக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 “லஞ்சம் வாங்கினால் கைது” –

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் பேசியதாவது: கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்யத் தவறிய பணிகளைச் செய்வதோடு, ராசிபுரம் தொகுதிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு வருவேன். நீண்ட நாட் களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழு கவனம் செலுத்தப்படும்.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்தைத் தவிர்க்கக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எச்சரிக்கை யையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும்.

வரி குறைப்பு நடவடிக்கை

வரி குறைப்பு தொடர்பாக வரும் பொதுமக்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான கோரிக்கைகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும், தமிழ் நாட்டில் வாட்  வரியைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு கேள்விக்கு மவுனம்

அமைச்சர் கூறிக் கொண்டி ருந்தபோது, செய்தியாளர் ஒருவர் தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க மறுத்த அமைச்சர், “அதைப்பற்றி கேள்வி கேட்காதீர்கள்” எனக் கூறிவிட்டுத் தவிர்த்தார்.

வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை தொடர்பான கேள்விகளுக்குத் தீவிரமாகப் பதிலளித்த அமைச்சர், மாநிலத் தின் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு முகம்சுளிக்கும் வகையில் பதிலளித்துச் சென்றது அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *