அறிவியல் துணுக்குகள்

1 Min Read

அமெரிக்க ராணுவம், வெப்ப உருவப்படமாக்கல் மற்றும் குறைந்த ஒளித் தொழில்நுட்பங்களை இணைக்கும், ‘பினோட்’ (BINOD) என்ற இருளில் பார்க்கும் கண்ணாடிகளைச் சோதித்து வருகிறது. இக் கருவி, புகை, பனி, இருள் என பல சூழல்களிலும் இலக்குகளைத் தெளிவாகக் காட்டும். முந்தைய நைட்விஷன் கண்ணாடியை விட இது துல்லியமானது.

செலோடேப்பை உரிக்கும்போது, அதன் பரப்பில் நுண் காந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இவற்றை பயன்படுத்தி, கணினி தரவுகளை சேமிக்க முடியும் என, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எதிர்கால மின்னணுவியலில் மலிவான, குறைந்த ஆற்றலில் நினைவகத்திற்கு வழிவகுக்கும்.

தீக்கோழி வகையைச் சேர்ந்த ‘கேசோவரி’ பறவையை உலகின் மிக ஆபத்தான பறவை என்பர். அதன் தலைக்கவசம் போன்ற உறுப்பு, குறைந்த அதிர்வெண் ஒலிகளை பெருக்கிக் காட்டவும், எதிரிகளுக்கு தன் பலத்தை உணர்த்தவும் உதவக்கூடும் என்கிறது, ‘நேச்சர்’ இதழில் வெளியான ஆய்வு ஒன்று.

குளிர்கால உறக்க நிலையில் அணிலின் மூளையில், மிகக் குறைந்த ரத்த ஓட்டமே இருக்கும். இருந்தும் பாதிப்படையாமல் அது எப்படி உயிர்வாழ்கிறது என்பதை அலாஸ்கா பல்கலையினர் ஆராய்ந்து வருகின்றனர். அணில்கள் குறைந்த ரத்த ஓட்டத்தின்போது மூளை செல்களைப் பாதுகாக்கும் விதத்தை கண்டறிந்தால், பக்கவாதத்திற்கான மருத்துவச் சிகிச்சையை வடிவமைக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் ‘நாசா’ நடத்திய தீவிர சோதனைகளில், ஒரு அயன் இயந்திரம் (Ion engine), முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. கோள்களின் ஈர்ப்புவிசையற்ற விண்வெளியில், மின்னுாட்டம் பெற்ற துகள்களை முடுக்குவதன் மூலம், இந்த அயன் இயந்திரம் நல்ல உந்துசக்தியை உருவாக்குகிறது. நிலவு மற்றும் செவ்வாயைத் தாண்டிய தொலைதுார விண்வெளித் திட்டங்களுக்கு, குறைந்த எரிபொருளுடன் அதிக துாரம் பயணிக்க இத்தொழில்நுட்பம் உதவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *