தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? மூன்று பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!

சென்னை, மே 27 தமிழ் நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநரை நியமிப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 3 பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய உள்துறை அதிகாரிகள் நேற்று (26.5.2026) ஒப்புதல் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நிர்வாகப் பிரிவு காவல்துறை தலைமை இயக் குநராக வெங்கட்ராமன் பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக் கப்பட்டார். அதன் பின்னர், நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு, தகுதி யான 10 அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப் பியது.

முதலில் ஒன்றிய அரசு அனுப்பிய பட்டியலில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் வன்னியபெருமாள் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சான்றிதழ் வழங்காததால், அந்தப் பட்டி யலைத் தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. புதிய பட்டியலை தயாரிப்பதற்கான அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்களும் தள்ளிப்போயின.

இந்தச் சூழ்நிலையில், புதிய காவல்துறை தலைமை இயக்குநராகத் தேர்வு செய்வ தற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (26.5.2026) டில்லியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஒன்றிய அரசு அதிகாரிகளுடன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் மற்றும் உள்துறைச் செய லாளர் மணிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்

இறுதிப் பட்டியலில் உள்ள மூன்று அதிகாரிகள்:

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, இறுதி செய்யப்பட்ட 3 பேர் கொண்ட புதிய பட்டி யலை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள்:

ராஜீவ்குமார் சந்தீப் ராய் ரத்தோர் மகேஷ்குமார் அகர்வால்

ஒன்றிய அரசு அனுப்பியுள்ள இந்தப் பட்டியலில் உள்ள ராஜீவ்குமார், சட்டம் ஒழுங்கு பணியில் குறைவான நாட்களே பணியாற்றிய அனுபவம் கொண் டவர் என்பதால், அவரது பெயர் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப் படுகிறது.

எனவே, தற்போதைய சூழலில் சந்தீப் ராய் ரத்தோர் அல்லது மகேஷ்குமார் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவரே தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகும்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *