சீனாவில் இருந்து நவீன தொழில் நுட்பம் மூலம் அய்தராபாத்தில் உள்ளவருக்கு அறுவைச் சிகிச்சை! வியக்க வைக்கும் அறிவியல் முன்னேற்றம்!

1 Min Read

அய்தராபாத், மே 26- தெலங்கானா மாநில தலைநகர் அய்தராபாத்தை சேர்ந்த சிறுநீரகவியல் துறை மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார்.

இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலைவில் உள்ள அய்தராபாத் மருத்துவமனையில் உள்ள மருத்துவப் பயனாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்கள் நீடித்தது.

அய்தராபாத் மருத்துவமனையில் மருத்துவப் பயனாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, சிறப்பு ரோபோ கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அதேநேரம் வூஹானில் உள்ள மருத்துவமனையில் இருந்த மருத்துவர் சையது முகமது கவுஸ், ரிமோட் கன்ட்ரோல் மூலம் அய்தராபாத்தில் உள்ள ரோபோ கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

5ஜி தொழில்நுட்பம், 3டி ஒளிப்படக் கருவிகள் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு உதவியுடன் சீனாவில் இருந்து அய்தராபாத்தில் உள்ள ரோபோ கருவிகள் இயக்கப் பட்டன. இந்திய மருத்துவத் துறையில் இது புதிய முயற்சி ஆகும் என்று மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இதுவரை சீனாவில் தூரக்கிழக்கு சாங்காய் மாகாணத்தில் இருந்து பல ஆயிரம் கிலோமிட்டர் வடக்கில் உள்ள திபெத்திற்கு அருகில் உள்ள காரகோரா என்ற பகுதியில் இருந்த மருத்துவப் பயனாளிக்கு அறுவை சிகிச்சை செய்தது சாதனையாக இருந்த நிலையில் தற்போது நாடு விட்டு நாடுகடந்து  இணையவழி அறுவை சிகிச்சை செய்து அறிவியலின் அடுத்த பாய்ச்சலுக்கு மருத்துவ உலகம் சென்றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *