உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு

1 Min Read

லண்டன், மே 24- இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: உலகளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 120 கோடியாக உள்ளது.

இது கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 மடங்காகும். இதுபோன்ற பாதிப்பு பெண்களிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அதேநேரத்தில் ஆட்டிசம், கவனக் குறைபாடு, ஆளுமை குறைபாடு போன்றவை ஆண்களிடம் காணப்படுகின்றன.

இதேபோல் கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும், மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த பூமியில் 7 பேரில் ஒருவர் மனநல பாதிப்பில் வாழ்கிறார்.

கரோனா தொற்றுக்கு முன்பே பதற்றம், மன அழுத்தம் போன்றவை அதிகமாக இருந்தன. உலகளவில் கரோனா காலத்திலும், அதற்குப் பிறகும் அந்தப் பிரச்சினை வேகமாக அதிகரித்துவிட்டது. அதன்பிறகு பழைய நிலைக்கு வரவில்லை.

அதிலும் கடந்த 2023ஆம் ஆண்டுதான் இந்தப் பிரச்சினை உச்ச கட்டத்தில் இருந்துள்ளது. குறிப்பாக 15 வயது முதல் 19 வயதுள்ள இளைஞர்கள்தான் மனநலம் பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உலகளவில் மனநல சேவைகளை அதிகரிப்பது மட்டும் தீர்வாகாது. வாழ்க்கை முறையில் தெரபி, தேவைப்படும் நேரங்களில் மருந்துகள், உணவு, உடற்பயிற்சி, உறக்கம், சமூக ஈடுபாடு போன்ற மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு லான்செட் இதழில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியர் டாக்டர் டேமியன் சன்டோமவ்ரோ கூறும்போது, ‘‘இந்த அளவுக்குப் பாதிப்பு இருப்பதை அறிந்து உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தேன்’’ என்று கூறியுள்ளார். இவரது குழுவினர் 12 பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *