மெட்டா நிறுவனத்தில் அதிரடி: 8 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் பொறியியல் துறையினர் அதிகம் பாதிப்பு!

1 Min Read

புதுடில்லி, மே 21 உலக அளவில் மிகவும் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற சமூக ஊடகத் தளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது பன்னாட்டளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களது கவனத்தை ஏஅய் தொழில்நுட்பத்தின் பக்கம் திருப்பி, அதில் விரைந்து முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே மெட்டா நிறுவனம் இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

சிங்கப்பூரில் உள்ள மெட்டா அலுவலக ஊழியர்களுக்கு நேற்று (20.5.2026) அதிகாலை 4 மணியளவில் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேபோல அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அதே நாளில் மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு முடித்துக்கொள்ளப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் பணிநீக்க நடவடிக்கை யைத் தொடர்ந்து, தற்போது பணியில் தொடரும் எஞ்சிய மெட்டா ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு நிறு வனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், குறிப்பாகப் பொறியியல் துறையைச் சேர்ந்த ஊழியர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *