அரக்கோணம், மே 20- தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) வீரர்கள் அவசர அவசரமாக கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
கேரள அரசு விடுத்த வேண்டுகோளின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள மீட்புப்படை முகாமில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், மழைக்கால பாதிப்புகளை எதிர்கொள்ளவும் கேரளாவின் முக்கிய 8 மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழுக்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன்படி கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மீட்புக்குழுவினர் அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
