பொது மக்களுக்கு அறிவுரை கூறும் பிரதமர் மோடி முதலில் தனது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சாடல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சண்டிகர், மே19- “பொதுமக்களை வெளிநாடு களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர மோடிதான், முதலில் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமரின் அறி வுரைகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். வீட்டில் இருந்து பணியாற்றுதல்: “மக்களை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள்என்று அறி வுறுத்தும் பிரதமரால், ஏன் வீட்டில் இருந்து பணியாற்ற முடியவில்லை?  என்று பகவந்த் மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதாரக்
கட்டுப்பாடுகள்

உலகில் எங்கோ நடக்கும் போரைக் காரணம் காட்டி, நம் நாட்டில்தான் பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்படுகின்றன என்றும் அவர் சாடினார். பொதுமக்களுக்குக் கட்டுப் பாடுகளை விதிக்கும் தலை வர்கள், முதலில் அதனைத் தங்களுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாப் முதல மைச்சரின் இந்த அறிக்கை தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *