சண்டிகர், மே19- “பொதுமக்களை வெளிநாடு களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர மோடிதான், முதலில் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமரின் அறி வுரைகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். வீட்டில் இருந்து பணியாற்றுதல்: “மக்களை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள்என்று அறி வுறுத்தும் பிரதமரால், ஏன் வீட்டில் இருந்து பணியாற்ற முடியவில்லை? என்று பகவந்த் மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதாரக்
கட்டுப்பாடுகள்
உலகில் எங்கோ நடக்கும் போரைக் காரணம் காட்டி, நம் நாட்டில்தான் பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்படுகின்றன என்றும் அவர் சாடினார். பொதுமக்களுக்குக் கட்டுப் பாடுகளை விதிக்கும் தலை வர்கள், முதலில் அதனைத் தங்களுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாப் முதல மைச்சரின் இந்த அறிக்கை தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
