‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மோசடி சி.பி.அய். விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, மே 18 ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஅய் வட்டாரங்கள் கூறியதாவது: ஐந்து கட்டங்களாக நீட் வினாத்தாள் தயார் செய்யப்படுகிறது. முதல் கட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் நீட் தேர்வுக்கான வினாக்களை தயாரிக்கின்றனர். 2-ஆம் கட்டமாக பேராசிரியர்கள் அளித்த வினாக்கள் தொகுக்கப்பட்டு, இரு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், 3-ஆம் கட்டமாக இரு வகை வினாத்தாள்களிலும் எழுத்து, கருத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டு, அவை திருத்தப்படும். 4-ஆம் கட்ட மாக என்டிஏ மூத்த அதிகாரிகள் வினாத்தாள்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவார்கள். 5-ஆம் கட்டமாக இருவகை நீட் வினாத்தாள் களும் அச்சடிக்கப்படும்.

திட்டமிட்ட மோசடி

இதில் ஒரு வகை வினாத்தாள் மட்டுமே தேர்வின்போது வழங் கப்படும். நீட் வினாத்தாளை விற் பனை செய்த பேராசிரியை மணிஷா குருநாத், பேராசிரியர் பி.வி.குல்கர்னி ஆகியோர் என்டிஏ தயார் செய்த இரு வகை வினாத்தாள்களையும் மாதிரி வினாத்தாள்கள் என்ற பெயரில் விற்பனை செய்துள் ளனர். அவர்களின் மாதிரி வினாத் தாள்களில் மொத்தம் 300 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதில் 150 கேள்விகள் கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாளுடன் அப்படியே பொருந் திப் போகின்றன. மீதமுள்ள 150 கேள்விகள், இரண்டாம் வகை வினாத்தாளில் இடம்பெற்றுள்ளன. இது நன்கு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய மோசடி. இவ்வாறு சிபிஅய் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *