பூண்டி கே.கலைவாணனுக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து

திருவாரூர், மே 17- திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் களமிறங்கிய திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் மூன்றாவது முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்கள், கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ. மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ உள்ளிட்டோர் நேற்று (15.5.2026) திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமாகிய  பூண்டி கே.கலைவாணன் அவர்களை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

தொடர்ந்து மே 16 அன்று திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற இருக்கும் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட் டத்திற்கும், மே 17 அன்று நடைபெற இருக்கும் பெரியார் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிக்கும் அழைப்பிதழ் சட்டமன்ற உறுப்பினரிடம் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தினரால் வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *