மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தேர்தல் அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமிப்பதா? பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, மே 14 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, மேனாள் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமித் துள்ளார்.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக – தேர்தல் ஆணையத் தின் திருட்டு சந்தையில் திருட்டு எவ்வளவு பெரியதோ, பரிசும் அவ்வளவு பெரியது” என்று கூறி யுள்ளார். இந்த நியமனத்தைத் தற் போது எதிர்க்கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸும் கடுமை யாக விமர்சித்துள்ளது.

இக்கட்சியின் சாகேத் கோகலே வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “தேர்தல் ஆணையத்துக்காக மேற்கு வங்கத் தேர்தலை நடத்திய மனோஜ் அகர்வால், புதிய பாஜக அரசால் தலைமைச் செயலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவும் தேர்தல் ஆணையமும் தேர் தலைத் திருடியதை இப்போது வெளிப்படையாக ஒப்புக்கொள் கின்றன. இவை நீதிமன்றங்களின் கண்களுக்கு தெரியவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *