த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை! பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் தரப்பு புகார்

சென்னை, மே 14- ‘கட்சிக் கட்டுப் பாட்டை மீறி, த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்த, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பேரவைத் தலைவரிடம், இபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அ.தி.மு.க.,வின் எஸ்.பி.வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், 25 பேர், த.வெ.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இபிஎஸ் தரப்பில், அக்கட்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அலுவலகத்தில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, த.வெ.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டப்பேரவையில், த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ், இது குறித்து சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தார். ஆசை வார்த்தை கூறி, அதன் வழியே ஆதாயம் தேடும் முயற்சி நடக்கிறது என தெரிவித்தார். ஆனால், பேரவைத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

கட்சி கட்டுப்பாட்டை மீறி ஓட்டளித்தது, சட்டப்பேரவை ஓட்டெடுப்பு விதிகளின்படி, சட்டத்துக்கு எதிரானது. கொறடா உத்தரவை மீறியதால், கட்சி தாவல் சட்டம் இதில் வருகிறது. அதன் காரணமாக, பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்க சென்றோம். அவர் இல்லாததால், அவரின் செயலாளரிடம், புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *