குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் கோரிக்கை

1 Min Read

மேட்டூர், மே 13 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மே மாதத்திற்கு வழங்க வேண்டிய 2.50 டி.எம்.சி (TMC) நீரை கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவில்லை. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் வெறும் 79.49 அடியாக மட்டுமே உள்ளது. பொதுவாக குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட வேண்டுமெனில், போதிய நீர் இருப்பு அவசியமாகும்.

ஜூன் 12-ஆம் தேதிக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், அணை திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல மைச்சர்  விஜய்  நேரடியாகத் தலையிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின் றனர். கருநாடக அரசிடமிருந்து உரிய நீரைப் பெற சட்ட ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாக வும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

சாகுபடி காலம் நெருங்குவதால், முதல மைச்சர் இந்த விஷயத்தில் காட்டும் துரித செயல்பாடே இந்த ஆண்டின் குறுவை சாகு படியை தீர்மானிக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *