பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மே 13- பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப் பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திரைப்படக் கல்லூரி

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் (11.5.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது.

இப் படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2026-2027) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 12 (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஜூன் 2ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *