குவைத், கத்தார், அய்க்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்

ரியாத், மே 12- குவைத், கத்தார் மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு விளைவிக்க கூடியது என்று சவுதி அரேபியா கண்டனம் வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அய்க்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் நாடுகள் மீது நடந்த டிரோன் தாக்குதலுக்கு சவுதி அரேபிய அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களுடைய அரசு ஆதரவளிக்கிறது என தெரிவித்து உள்ளது.

குவைத் மீது நடந்த டிரோன் தாக்குதலுக்கு, கத்தார் அரசும் கண்டனம் தெரிவித்து உள்ளது. குவைத்தின் இறையாண்மை மற்றும் பன்னாட்டு சட்ட விதிமீறலாகும் என குறிப்பிட்டு உள்ளது. குவைத் நாட்டின் வான்வெளி மீது நேற்று (11.5.2026) காலை டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதற்கு அய்க்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டன செய்தியில், குவைத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், இந்த பயங்கரவாத தாக்குதல்கள் குவைத்தின் இறையாண்மையை மீறும் செயலாகும் என்றும் தெரிவித்தது. இதனை ஈரான் நடத்தியிருக்கக் கூடும் என அந்நாடுகள் தெரிவித்து உள்ளன என செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *