சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று (10.5.2026) முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசு அமைந்துள்ள நிலையில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் எடுக்கப்படும்.
அந்த வகையில் தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் அய்.ஏ.எஸ். நிய மனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்தவர் செந்தில்குமார். தற்போது அவர் முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த லட்சுமி பிரியா, ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதி காரிகள் மாற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
