மதுரையில் அன்னை நாகம்மையார் நினைவு நாள்

நாள்: 11-05-2026 திங்கள் காலை 10மணி

இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி மதுரை

அன்னை நாகம்மையார் நினைவு நாளில் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அ.முருகானந்தம் மாவட்ட தலைவர்

இரா.லீ.சுரேஷ் மாவட்ட செயலாளர்

– – – – –

குமரிமாவட்டக் கழக சார்பாக
அன்னை நாகம்மையார் நினைவு நாள்

அன்னை நாகம்மையாரின் நினைவு நாளையொட்டி 11.5.2026 அன்று காலை 10 மணியளவில் நாகர்கோவிலில்  ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் அன்னையார் படத்திற்கு  மாலையிட்டு மரியாதை செலுத்தப்படும்.

தலைமை:  மா.மு. சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர், முன்னிலை: கோ.வெற்றிவேந்தன், மாவட்டச் செயலாளர்.

கன்னியாகுமரி மாவட்டக் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்பாடு:  குமரி மாவட்டத்  திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *