ம.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

2 Min Read

ராணுவப் பெண் அதிகாரி குறித்து அவதூறு
அமைச்சரைத் தண்டிக்க முடிவெடுங்கள்

புதுடில்லி, மே 10 ‘ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவை தண்டிப்பதற்கான அனுமதியை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்’ என, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், ‘இனியும் பொறுக்க முடியாது’ என கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

‘ஆப்பரேஷன் சிந்தூர்’

பஹல்காம் பயங்கரவாதி தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வி யோமிகா சிங் பங்கேற்றனர்; செய்தியாளர் களையும் சந்தித்து போர் நிலவரம் குறித்து விளக்கினர்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச் சரவையில் இடம் பெற்ற பழங் குடி நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை சுட்டிக் காட்டி, ‘நம் மக்களை கொன்று குவித்தவர்களுக்கு, எதிரிகளின் சகோதரியே தக்க பதிலடி கொடுத்துவிட்டார்’ என தெரிவித்திருந்தார்.

விஜய் ஷாவின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்ததால், தன் பேச்சுக்கு ஷா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, ‘பொதுவெளியில் ஏன் பகிரங்க மன்னிப்பு கோர வில்லை? நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்’ என அமைச்சர் ஷாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில், இவ்வழக்கு நேற்றுமுன்தினம் (8.5.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிறப்பு புலனாய்வு குழு தன் விசாரணையை முடித்துவிட்டு, மத வெறுப்பு மற்றும் பகையை தூண்டும் பாரதிய நியாய சன்ஹிதா 196 பிரிவின் கீழ், அமைச்சரை தண்டிக்க அனுமதி கோரி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், மாநில அரசு இன்னும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

நடவடிக்கை

இது தொடர்பாக கடந்த ஜன., 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அமைச்சர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அமைச்சரின் நடத்தை, நீதிமன்றத் தின் பொறுமையை வெகுவாக சோதிப்பதாக உள்ளது. இனியும் பொறுக்க முடியாது.

அமைச்சரை தண்டிப்பது குறித்து, அடுத்த நான்கு வாரங் களுக்குள் மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *