அய்.எப்.எஸ். இறுதி தேர்வு முடிவு வெளியீடு தமிழ்நாட்டில் 17 பேர் வெற்றி பெற்றுச் சாதனை

2 Min Read

சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா இந்திய அளவில் 9ஆம் இடத்தைப் பிடித்தார்

சென்னை, மே 10 அய்எப்எஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 17 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்துள்ளார். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் அய்எப்எஸ் (இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. 2025ஆம் ஆண்டுக்கான 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப் பட்டது.

முதலில் முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி மெயின் தேர்வுக்கான தேர்வு முடிவினை வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் நேர்முக தேர்வு முடிந்து  யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது. இதில், இந்தியா முழுவதும் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 17 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது குறித்து சங்கர் அய்ஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: அய்எப்எஸ் தேர்வுக்கான நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதித் தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in வெளியிட்டது. இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்றவர்களில்  5 பேர் பெண்கள்.  சென்னையில் மாணவியான ரவி லட்சுமிப்பிரியா, அகில இந்திய அளவில் 9ஆவது இடத்தைப் பிடித்து, தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் சித்தார்த் அகில இந்திய அளவில் 3ஆவது இடமும், ஆஞ்சல் (சர்மா) அகில இந்திய அளவில் 5ஆவது இடமும், அனூப் ரெட்டி அகில இந்திய அளவில் 6ஆவது இடமும், சங்கல்ப் தீட்சித் 8ஆவது இடமும்,  அஷ்வனி குமார் ராய் 10ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *