சென்னை, மே 9- தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மன உறுதி மற்றும் மன நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதற்காக ‘நட்புடன் உங்களோடு’ என்ற திட்டத்தின் கீழ் தொலை பேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் (Tele-Counseling) வழங்கப்பட்டு வருகின்றன.
தேர்வு முடிவுகளால் மன அழுத்தம் அல்லது கவலைக்குள்ளாகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 14416 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்தச் சேவையானது பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்டு முற்றிலும் கட்டணமின்றி வழங்கப் படுகிறது. மாணவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி இந்த எண்களை அழைத்து தங்களது மனக் குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உயர்கல்வி வழிகாட்டுதல்:
தேர்ச்சி பெற்ற மாண வர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு சேரலாம்? போன்ற உயர் கல்வி சார்ந்த சந்தேகங் களுக்குப் பள்ளிக்கல்வித் துறையின் சிறப்பு 14417 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடவும், தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் இந்த அரசு முறைச் சேவைகளைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
